WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 29, 2015

குரூப் 2 சான்றிதழ் சரிபார்ப்பு குழப்பத்தை தெளிவுபடுத்திய டி.என்.பி.எஸ்.சி.

                                  
 குரூப் - 2 தேர்வில் நடந்துவரும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான குழப்பத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தெளிவுபடுத்தி உள்ளது.

குரூப் - 2 தேர்வில் வழக்கத்திற்கு மாறாக, 1:5 என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டதால், எந்த அடிப்படையில் இறுதித் தேர்வு நடக்கும் என்று 5,635 தேர்வாளர்களும் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் வெளியிட்ட அறிவிப்பு: தேர்வாணையத்தால், 2013, 2014ம் ஆண்டுகளுக்கான குரூப் - 2 தேர்வில், நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு நவம்பர் 8, 9ம் தேதிகளில் நடந்தன.

இதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீடு, காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தில், ஒரு காலிப் பணியிடத்திற்கு, ஐந்து விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச் 26 முதல் மே 8 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இதன்பின், விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீடு, காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில், 1:2 (ஒரு பதவிக்கு இருவர்) என்ற விகிதத்தில், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.