WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 29, 2015

பிஎட் படிக்கும் ஆசிரியர்களுக்கு சலுகை பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம் : தமிழக அரசு உத்தரவு

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பிஎட் படித்தால் பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா வெளியிட்ட உத்தரவு:

ஊராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பிஎட் பயில்கின்றனர்.

இதற்காக இவர்கள் பள்ளிகளை தேர்வு செய்து கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும்போது அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்படு கிறது. எனவே, அவர்கள் பணிபுரியும் பள்ளி ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளியாக இருந்தால் பாதிப்பு மேலும் அதிகமாகிறது.

எனவே, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பிஎட் பயிலும்போது உரிய அனுமதி பெற்று அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே பணிக்கு இடையூறு இன்றி பயிற்சி எடுக்கலாம்.

இதேபோல தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அஞ்சல் வழிக்கல்வி மூலம் பிஎட் பயிலும்போது கற்பித்தல் பயிற்சியை அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம் என ஆணை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை அரசால் ஆய்வு செய்யப்பட்டு, தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பிஎட் படிக்கும்போது அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் பயிற்சி மேற்கொள்ளலாம்.

ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சியை அவர்கள் பயிலும் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கும் பள்ளிகளில் மேற்கொள்ள அனுமதிக்கலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.