WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 27, 2015

முதுகலை ஆசிரியர் பணி: நாளை கலந்தாய்வு

முதுகலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நாளை (28ம் தேதி) கடலூரில் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி செய்திக்குறிப்பு:

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உ<ள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வரியம் போட்டித் தேர்வுகளை நடத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளில் நடத்திய போட்டித் தேர்வுகளில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரும் 28ம் தேதி காலை 9:30 மணிக்கு கடலூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணைய தளம் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்விற்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் "ஹால் டிக்கெட்', ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய சான்று, கல்வி சான்றிதழ்கள், ஜாதிச்சான்று மற்றும் வேலைவாய்ப்பு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றம் நகல் கொண்டு வர வேண்டும். இந்த கலந்தாய்விற்கு நாளை (28ம் தேதி) காலை 9:00 மணிக்கு முன்னதாக வருகை தர வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.