WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 27, 2015

இலவச ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வகுப்பு : பழங்குடியின மாணவர்களுக்கு அழைப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க,
பழங்குடியினர் பட்டதாரி மாணவ, மாணவியர், தங்களது பெயரைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:பி.எட். முடித்து, கடந்தாண்டு மார்ச், 31ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பழங்குடியின பட்டதாரி மாணவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சியில் பங்கேற்க வரும், 31ம் தேதி வரை, ஆசிரியர் பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு பதிவு அட்டையுடன் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக மேலும் தகவல் தெரிந்து கொள்ள. புலிகரையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் நிறுவன மொபைல்ஃபோன் எண், 73730-03385, 73730-03386 தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.