ஆதிதிராவிட ஆய்வு மாணவர்களுக்கான, ராஜிவ் காந்தி தேசிய கல்வி
உதவித்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்த, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவிப்பு:
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின், பிப்., 24ம் தேதி கடிதப்படி, ராஜிவ்காந்தி தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஆதிதிராவிட ஆய்வு மாணவர்களுக்கான உதவித்தொகை, 2014 டிச., 1ம் தேதியிட்டு உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி, இளநிலை ஆய்வாளர்களுக்கு (ஜே.ஆர்.எப்.,), இரு ஆண்டுகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்பட்ட, 16 ஆயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மூத்த ஆய்வாளர்களுக்கு ( எஸ்.ஆர்.எப்.,), மீதமுள்ள ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட, 18 ஆயிரம் ரூபாய், 28 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், தற்போது, ஆய்வு உதவித்தொகை பெறும் காலம், அதிகபட்சமாக, ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.