WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 20, 2015

10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்.

பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி திங்கள்கிழமை (ஏப்.20) முதல்
தொடங்கப்பட உள்ளது.  பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 3,298 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.  இவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 75 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.  விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் மே மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.