WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 23, 2015

பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதி வெளியாகிறது: 10ம் வகுப்பு ரிசல்ட் மே 21-ல் வெளியீடு.

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதியும், பத்தாம் வகுப்பு
தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதியும் வெளியாகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம், 3 ஆயிரத்து 298 மையங்களில் 11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தேர்வு முடிவு வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா இன்று அறிவித்துள்ளார். பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதி காலை 10 மணிக்கும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி காலை 10 மணிக்கும் வெளியாகும் என அவர் தெரிவித்தார். dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.