WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 20, 2015

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியாகலாம் என, கல்வித்துறை
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர். மார்ச் 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், மார்ச் 16ல் துவங்கி, நாளையுடன் முடிகிறது. தற்போது மதிப்பெண் சரிபார்ப்பு, விடை திருத்து மையப் பட்டியல் படி, மதிப்பெண் சி.டி., தயாரிப்பு போன்ற பணிகள் நடக்கின்றன. 22ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி துவங்க உள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல் 17ல் முடிக்க திட்டமிட்டோம். சில நாட்கள் நீட்டித்து விட்டது. வரும் 22ம் தேதி முதல், மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணி துவங்கும். இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாவதால், அதன் தயாரிப்புப் பணி அடிப்படையில், ரிசல்ட் வெளியாகும் தேதி முடிவாகும். எப்படியும், மே 4ம் தேதி முதல் 7ம் தேதிக்குள் ரிசல்ட் வெளியாகலாம். பெரும்பாலும், மே 7ம் தேதியே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.