WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 2, 2015

உதவி பேராசிரியர் பணி: டி.ஆர்.பி., பட்டியல் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு,
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு, 2013 மே 28ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை, நேரடி நியமனம் மூலம் நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை மேற்கொண்டது. பின், 2013 நவம்பர், 25 முதல், டிசம்பர், 6ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதன்படி, மதிப்பெண் கணக்கிடப்பட்டு, ஜாதி வாரி இட ஒதுக்கீடுப் படி, நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு பணியிடத்துக்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், தேர்வானோருக்கு, கடந்த பிப்., 25 முதல் மார்ச் 25 வரை நேர்முகத்தேர்வு நடந்தது. இதைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற, 81 பேரின் பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இப்பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. பணிக்கு இறுதியாக தேர்வானோரின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.