கணினி பயிற்றுநர் காலிப் பணியிட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை, இணையதளம் மூலம் கலந்தாய்வு நடக்கிறது.இது குறித்து விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கணினி பயிற்றுநர் 652 காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்து பெறப்பட்டுள்ள தேர்வாளர்களுக்கு நியமன ஆணை வழங்கும் கலந்தாய்வு நாளை நடக்கிறது. இணையதளம் மூலம் அனைத்து மாவட்ட சி.இ.ஓ., அலுவலக கலந்தாய்வு மையத்தில் நாளை காலை 10 மணி முதல் கலந்தாய்வு நடக்கிறது. தெரிவு பட்டியலில் இடம்பெற்றுள்ள, விழுப் புரம் மாவட்ட பணிநாடுநர்கள் விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகத்திற்கு நாளை காலை 9 மணிக்குள் வர வேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய ஹால்டிக்கெட், தேர்ச்சி சான்றிதழ், அசல் கல்வி சான்றிதழ்கள், சாதிச்சான்று மற்றும் உள்ளிட்ட இதர ஆவணங்களுடன் பங்கேற்று பணிநியமன ஆணைகளை பெற்று கொள்ளலாம்.இவ்வாறு விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.