WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, April 3, 2015

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் கணினி ஆசிரியர் நியமிக்க தடை: ஐகோர்ட் உத்தரவு

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களில்
முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னாள் ராணுவ வீரர் மகன் டான்போஸ்கோ உள்பட 3 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கம்ப்யூட்டர் ஆசிரியராக படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். தற்போது, தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் பாடம் எடுக்க கம்ப்யூட்டர் ஆசிரியர்களை அரசு தேர்வு செய்து வருகிறது. இதற்கான கவுன்சலிங் வரும் 4ம் தேதி (நாளை) நடக்கிறது. 

சீனியாரிட்டி பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகம் அரசுக்கு அனுப்பியுள்ளது. இதில் விதவைகளுக்கும், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கும் மட்டும் முன்னுரிமை கொடுத்துள்ளது. இது தவறானது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என்று அரசு உத்தரவில் தெளிவாக கூறியும் இதை பின்பற்றவில்லை. இதனால் நாங் கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும். கவுன்சலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இந்த மனுவை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். 

மனுதாரர் சார்பாக வக்கீல் தாட்சண்யா ரெட்டி ஆஜராகி, மனுதாரர்களுக்கும் முன்னுரிமை தர வேண்டும். அதுவரை கவுன்சலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதி, ஆசிரியருக்கான கவுன்சலிங் நடத்தலாம். ஆனால் முன்னுரிமை பிரிவில் தேர்வு செய்தவர்களுக்கு பணி வழங்க தடை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.