உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட 652 கணினி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டனர். பின்னர் அந்த பட்டியல் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட தேர்வாளர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக (ஆன்லைன் மூலம் கலந்தாய்வு)அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் அமைந்துள்ள கலந்தாய்வு மையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.
ஆசிரியர்களாக நியமிக்க தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்ச்சிபெற்றமைக்கான சான்று, அசல் கல்வி சான்றிதழ்கள், சாதிச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் வரவேண்டும்.
இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.