WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 9, 2015

ஒரு நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரி!!!

ஒரு நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரியை
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது தொடர்பாக விஞ்ஞா னிகள் குழுவின் தலை வரும், வேதியியல் துறை பேராசிரியருமான ஹாங்கி டாய் கூறியது: இப்போது செல்போன் களில் பயன்படுத்தி வரும் லித்தியம் மற்றும் அல்காலின் பேட்டரிகளுக்கு பதிலாக அலுமினியம் பேட்டரியை புதிதாக வடிவமைத்துள் ளோம். இதனை அதிவிரை வாக சார்ஜ் செய்ய முடியும். இது தவிர தீப்பிடிப்பது உள்ளிட்ட அபாயங்கள் இதில் இருக்காது. மேலும் மற்ற பேட்டரிகளை போல சுற்றுச்சூழலையும் இந்த அலுமினியம் பேட்டரி கள் கெடுக்காது. லித்தியத் துடன் ஒப்பிடும்போது அலுமினியம் விலை மலிவானது. இந்த பேட்டரிகளை வளைக்கவும், மடிக்கவும் கூட முடியும். செல்போனில் மட்டுமல்லாது லேப்டாப், டேப்லெட் உட்பட பல்வேறு வகையான மின்னணு சாதனங்களில் இந்த புதிய பேட்டரிகளை பயன்படுத்த முடியும் என்றார். இந்த புதிய கண்டுபிடிப்பு செல்போன் மற்றும் பேட்டரி தயாரிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியாகவே கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.