எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் ஏப்ரல் 15-ம் தேதி முதல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஏப்ரல் 15 முதல் 21-ம் தேதி வரை ஆன்லைனில் (www.tndge.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர் பன்னிரண்டரை வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அரசு தேர்வுத் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருங்கிணைப்பு மையங் களின் விவரத்தை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125. ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50. விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல் அல்லது பிறப்புச் சான்றிதழ் நகல் மற்றும் ரூ.40 மதிப்புள்ள தபால் தலை ஒட்டிய, சுயமுகவரி எழுதப்பட்ட உறையை இணைக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் பெறப் படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் வருபவை ஏற்கப்படாது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.