WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 20, 2015

நாளை 10-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 29-ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மறுகூட்டலுக்கு மே 22 முதல் விண்ணப்பிக்கலாம்

பத்து லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரம் மாணவிகள் மற்றும், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் உள்ளிட்ட மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதியுள்ளனர். 

இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை கல்லூரிச் சாலை டிபிஐ வளாகத்தில் தேர்வுத் துறையின் இயக்குநர் கே.தேவராஜன் தேர்வு முடிவுகளையும், மாநில அளவில் ரேங்க் பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிடுகிறார். 

தேர்வு முடிவு வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில் கீழ்க்காணும் இணையதளங்களில் மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். 


 




பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. 

மே 22 முதல் 27-ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையத்தின் மூலமாகவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு தாள்கள் (மொழிப்பாடம், ஆங்கிலம்) கொண்ட பாடத்துக்கு கட்டணம் ரூ.305, ஒரு தாள் கொண்ட பாடத்துக்கு (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ரூ.205. 

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது ஒப்புகைச்சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத் தித்தான் மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும். 

பள்ளி தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 29 முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம். 

பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர் களும் தேவைப்பட்டால் ஜூன் 4 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.