ஜூன் 1ம் தேதி பள்ளி திறப்பதற்கு முன், குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்; விடுப்பு எடுக்கக்கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து, வரும் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து, பள்ளிக் கல்வித்துறையிலிருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஒரு மாதம் வரை பள்ளி விடுமுறை நாளாக உள்ளதால், பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்கள் தேங்கி இருக்கும்.
அதை சுத்தம் செய்து, கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திறந்த கிணறுகள், பள்ளங்கள் இருந்தால் அதை சீரமைக்க வேண்டும். பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை, பள்ளி திறந்தவுடன் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.