WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 21, 2015

10-ம் வகுப்பு: இந்தாண்டு 92.9 சதவீதம் தேர்ச்சி.

தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் சென்னை சேலையூர் சியோன் பள்லி ஜேஸ்லின் ஜெலிசா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.  498 மதிப்பெண்கள் பெற்று 192 இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 540 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு முடிகளை வெளியிட்டு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாதவது: இந்த ஆண்டு மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த தேர்ச்சி விகிதம் 90.7 என்ற அளவில் இருந்தது. இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவியருக்கு எனது பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.