WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 27, 2015

தமிழ்நாட்டில் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறப்பு பள்ளிக்கல்வித்துறை தகவல்

தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1-ந்தேதி திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

வெயிலின் தாக்கம் 

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 1-ந்தேதி கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் தொடங்கி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. 

பெரியவர்களாலேயே இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியவில்லை. இந்த வெயிலுக்கு பயந்து சிலர் பிற்பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். 

முற்றுப்புள்ளி 

கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயிலின் கோரத்தாண்டவம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது பிற மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து தான் காணப்படுகின்றது. 

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் இந்தியா முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. 

இந்த வெயிலினால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புதுச்சேரியில் ஜூன் 1-ந்தேதிக்கு பதிலாக, ஜூன் 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், தமிழகத்திலும் பள்ளிகள் ஜூன் 1-ந்தேதிக்கு பதிலாக மாற்று தேதியில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருக்கலாம் என்று சில தகவல்கள் கடந்த சில நாட்களாக பரவி வந்தன. 

ஆனால் அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திட்டமிட்டபடி ஜூன் 1-ந்தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

திட்டமிட்டபடி திறப்பு 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தை முன்வைத்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படும், மாற்று தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. 

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திட்டமிட்டபடி ஜூன் 1-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அதே நாளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.