வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வெயிலின் தாக்கம்
வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டும், மாணவர்களின் உடல்நலத்தை பேணிகாப்பதில் கவனம் செலுத்தும் விதமாகவும் ஜூன் 1-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கையாக வைக்கிறோம்.
வெயிலின் தாக்கம் காரணமாக சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் இது ஏதுவாக அமையும். கற்றலும், கற்பித்தலும் முறையாக நடக்க வேண்டும் என்றால் அதற்கு மாணவர்களின் உடல்நிலை மிகவும் அவசியம்.
இதேபோல், வெயில் அதிகமாக இருந்ததால் கடந்த 2013-ம் ஆண்டு பள்ளிக்கூடங்கள் திறப்பதை 10 நாட்கள் தள்ளி வைத்தனர். அந்த சமயத்தில் 105 டிகிரி வெயில் தான் இருந்தது. ஆனால் தற்போது 108 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது.
தள்ளிவைக்க வேண்டும்
பெரியவர்களாலேயே வெளியில் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. அப்படி இருக்க மாணவ-மாணவிகள் எப்படி இந்த வெயிலை தாங்குவார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு பள்ளிக்கூடங்கள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும்.
மேலும் எங்களுடைய உயர்மட்டக்குழு கூட்டத்தில் 5-வது முறையாக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.