WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 4, 2015

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இரண்டு வாரங்களுக்குள் வழங்க உத்தரவு

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, தேர்வு முடிவு வெளியான, இரண்டு வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்து, மாணவர்களிடம் வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ல் துவங்கி, மார்ச் 31ம் தேதி முடிவடைந்தது. வரும், 7ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு, மதிப்பெண் பட்டியலை தாமதமாக வழங்கும் பிரச்னையை தவிர்க்க, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது.இதுதொடர்பாக, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து, பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு:

* தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கொண்டு, உயர்கல்வி படிப்புகளில் மாணவர்களை சேர்க்கலாம்.

* சான்றிதழை, பள்ளிகளில் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

* இதற்காக பள்ளிகளில், கணினி, பிரின்டர் மற்றும் இணையதள இணைப்பு வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

* பள்ளி அலுவலக ஊழியர்கள் மற்றும் விடுமுறையில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டு, மதிப்பெண் சான்றிதழை நகல் எடுத்து, தலைமை ஆசிரியர் கையொப்பமுடன், மாணவர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும்.

* தேர்வு முடிவு வெளியானதும், இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும்.

* இந்த சான்றிதழ், 90 நாட்களுக்கு மட்டுமே செல்லத்தக்கது.இவ்வாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.