WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 25, 2015

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4,339 ஆசிரியர், அலுவலர் நியமனம்

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 4,339 இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் உட்பட, 31 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பு, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டிலுள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 3,754 இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள்; 585 ஆசிரியர் அல்லாத நுாலகர், உதவியாளர், துணை முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள் என, மொத்தம், 4,339 காலியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை, ஜூன் 22 முதல் அனுப்பலாம் என, கேந்திரிய வித்யாலயா சங்கதன் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை, http:/kvsangathan.nic.in அல்லது https:/jobapply.in/kvs/ என்ற, இணையதளங்கள் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான மதிப்பெண், இடஒதுக்கீடு, வினாத்தாள் முறை போன்ற விவரங்களை, http:/kvsangathan.nic.in/EmploymentDocuments/EMP-NTC-18-05-15.PDF என்ற லிங்கில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு தேதி, இணையதளத்தில் பின் அறிவிக்கப்படும். எழுத்துத்தேர்வுக்குப் பின், செயல்முறை திறன் மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி, பணி நியமனம் வழங்கப்படும். இத்தேர்வில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கப்படும்; எனவே, தேர்வர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது அவசியம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.