மத்திய பாட திட்டமான சி.பி.எஸ்.இ. முறையில் பன்னிரெண்டாம் வகுப்பு
இறுதியாண்டு தேர்வுகளை எழுதிய மாணவ- மாணவியருக்கான முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நன்பகல் 12 மணிக்கு வெளியாகும் இந்த முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், டெல்லியில் இருப்பவர்கள் 24300699 என்ற எண்ணுக்கும், நாட்டின் பிறபகுதியில் வசிப்பவர்கள் 011-24300699 என்ற எண்ணுக்கும் போன் செய்து ஐ.வி.ஆர்.எஸ். (IVRS) முறையில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில நெட்ஒர்க்களில் ‘எஸ்.எம்.எஸ்.’ மூலமாகவும் முடிவுகளை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என மத்திய பாட திட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 10 லட்சத்து 28 ஆயிரத்து 928 மாணவ- மாணவியர் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின்கீழ் இறுதியாண்டு தேர்வுகளை எழுதி இருந்தனர், இதில் 82.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.