WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 24, 2015

அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க கல்வித்துறை முடிவு.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தேர்வுகளில், கல்வி மாவட்ட வாரியாக, அரசு பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், கடந்தாண்டை விட அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என, கணக்கிடப்படுகிறது. குறைந்திருப்பின், அது குறித்து, தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. விருதுநகர் மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சில அரசு பள்ளிகளில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், பொதுத்தேர்வுகளில், மாவட்ட தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க, இப்பள்ளிகளில் எத்தனை மாணவர்கள், எந்தெந்த பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை; அதற்கான காரணம் என்ன என, தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை கூட்டி, கருத்தை கேட்டு, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை சரிசெய்து, வரும் கல்வியாண்டில், 100 சதவீத தேர்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.