WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 24, 2015

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா?

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கும் பணி,
இரண்டாவது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பதவிக்கு, 4,362 இடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், ஆசிரியர்களை மட்டும்தான் நியமிப்போம். ஏற்கனவே பல நியமனங்கள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதால், புதிய தேர்வு நடத்துவது மற்றும் நியமனம் தாமதமாகும் என, டி.ஆர்.பி., தெரிவித்துவிட்டது. இதையடுத்து, கல்வித்துறையே தேர்வு நடத்த முடிவுசெய்து, தேர்வை, அரசு தேர்வுத்துறையிடம் ஒப்படைத்தது. தேர்வு, வரும் 31ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியானது. இதில், 8.7 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். முதலில், மே 21ம் தேதி நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின், 23ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. இப்போது, அதுவும் தள்ளிப்போகிறது. வரும் 25ம் தேதி நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.