WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 21, 2015

அறிவியலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சதம்.

தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெளியாகியுள்ளன. இதில் அறிவியல் பாடத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சதம் அடித்துள்ளனர். பாடவாரியாக நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்: தமிழ் - 586 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். ஆங்கிலம் - 644 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். கணிதம் - 27,134 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். அறிவியல் - 1,13,853 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். சமூக அறிவியல் - 51,629 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். வழக்கமாக சில நூறுகளில் தான் சதம் அடிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை இருக்கும். ஆனால், அறிவியலில் இப்படி ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் 100க்கு 100 மதிப்பெண் பிடித்திருப்பது சாதனையான விஷயமாக உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.