1,241 காலி பணியிடங்களுக்கு ஜூலை.26-ந்தேதி நடைபெறும் குரூப்-2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
83 உதவி மருத்துவ அதிகாரி
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவத்துறையில் காலியாக உள்ள 83 உதவி மருத்துவ அதிகாரி பணி(இதில் சித்தா-63, ஆயுர்வேதா-8, யுனானி-3, ஹோமியோபதி-9 அடங்கும்.) இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) நேற்று நடத்தியது.சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகரங்களில் 12 மையத்தில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் 1,798 பேர் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 695 பேர் எழுதினர். காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வு நடைபெற்றது.
பாலசுப்பிரமணியன் கண்காணிப்பு
சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் பார்வையிட்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி தேர்வு முடிவுகள் ஒன்றரை மாதத்துக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். குரூப்-2 பிரிவில் 1,241 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 31-ந்தேதி வெளியிடப்பட்டது. கடந்த 29-ந்தேதியுடன் விண்ணப்பம் தாக்கல் முடிவடைந்தது. இதில், 6 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுவதற்காக விண்ணப்பித்துள்ளனர். குரூப்-2 தேர்வு ஜூலை மாதம் 26-ந்தேதி நடைபெற உள்ளது.
குரூப்-1 தேர்வு
குரூப்-1 தேர்வில் அடங்கி உள்ள துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவியில் உள்ள 79 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு வருகிற 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை சென்னையில் மட்டுமே நடைபெற உள்ளது.
குரூப்-1 தேர்வில் காலியாக உள்ள 19 துணை கலெக்டர், 26 டி.எஸ்.பி., 21 வணிகவரித்துறை உதவி ஆணையர், 8 மாவட்ட பதிவாளர் உள்பட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு இன்னும் 2 வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
நேர்முக தேர்வில் குளறுபடியா?
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் அனைத்து நேர்முக தேர்வுகளும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நேர்முக தேர்வுகள் வீடியோ பதிவு செய்யப்படுவது கிடையாது. எனவே நேர்முக தேர்வில் எத்தகைய குளறுபடிகளும் நடைபெற சாத்தியக்கூறுகள் இல்லை. தேர்வில் வெற்றி பெற முடியாத சிலர் விரக்தியில் குளறுபடி என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா உள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.