WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 1, 2015

4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு: தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்

4,362 ஆய்வக உதவியாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 1,900 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதினர். 

தமிழக அரசு உத்தரவு 

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்களில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 362 பணி இடங் களை நிரப்ப பள்ளி கல்வித் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. 

பள்ளி கல்வி துறை தேர்வு மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இந்த தேர்வை எழுதுவதற்காக தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 87 ஆயிரத்து 71 பேர் விண்ணப்பம் செய்தனர். 

1,900 மையங்கள் 

ஆய்வக உதவியாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1,900 மையங்களில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. 

விண்ணப்பம் செய்தவர்களில், 7 லட்சத்து 31 ஆயிரத்து 844 பேர் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 55 ஆயிரத்து 227 பேர் தேர்வு எழுத வரவில்லை. பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, அரசு தேர்வுகள் இயக்குனர் தேவராஜன், ஆர்.எம்.எஸ்.ஏ. இயக்குனர் க.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன், பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனர் இரா.பிச்சை மற்றும் இணை இயக்குனர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களை கண்காணித்தனர். 

நேர்முக தேர்வு 

தற்போது நடைபெற்ற எழுத்து தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் வழங்க உள்ளது. 

அதனடிப்படையில், மாவட்ட அளவில் ரேங்க் பட்டியலில் பெயர் உள்ளவர்களிடம் நேர்முக தேர்வு நடத்தப்படும். பின்னர் இதில் வெற்றி பெறும் நபர்கள் ஆய்வக பணிக்கு நேரடியாக நியமிக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.