WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 18, 2015

மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நாளை தொடக்கம் மருத்துவப்படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நாளை தொடங்கி, 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூராரர் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட
அரங்கில் இந்த கலந்தாய்வு நடைபெறும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூட்ட அரங்கில் மாணவர்கள் வசதிக்காக 12 எல்.இ.டி. திரைகள், 5 கணினிகள், நிழற்கூடம், உணவு விடுதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  கடந்த ஆண்டு வரை இந்த கலந்தாய்வு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டும், கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வசதிகளை கருத்தில் கொண்டும், இவ்வாண்டிற்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்குகளில் சிறப்பான ஏற்பாடுகளுடன் நடத்தப்படுவதாக, தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.