WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 18, 2015

ஜூலை-1 முதல் தலைக் கவசம் அணிவது கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு.

சென்னை - வரும் ஜூலை 1 முதல் இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர்
தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு அணியாதவர்களின் வாகன ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. தலைக் கவசம் அணிவது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது., வரும் ஜூலை 1 முதல் இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் தலைக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். தவறும் பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டம் - 1988, பிரிவு 206-இல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்மந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும். இந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய தலைக்கவசம் மற்றும் அதனை வாங்கியதற்கான இரசீது ஆகியவற்றை காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. என அந்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, சில தினங்களுக்கு சென்னை ஐகோர்ட் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் ஜூலை 1-ம் தேதி முதல் தலைக் கவசம் அணிவது கட்டாயம் என்று ஐகோர்ட் நீதிபதிகள் கண்டிப்பாக கூறியிருந்தார்கள். அதை தொடர்ந்து தற்பொழுது தமிழக அரசும் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. தலைக் கவசம் அணிவது அவசியம் என்பது குறித்து ஆங்காங்கே பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் ஆகியவை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே இந்த உத்தரவை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். காரணம் தலைக் கவசம் உயிர் கவசமாகும் என்று மாவட்ட ஆட்சியாளர்களும் அறிக்கைகள் மூலம் பொது மக்களை வலியுறுத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.