பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ் வரமுருகன் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு: வளர் இளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்களுக்கு போலிக் அமிலம் அடங்கிய இரும்புச்சத்து மாத்திரைகள் வாரந் தோறும் வியாழக்கிழமை அன்று வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், மாணவர்களின் நினை வுத்திறனும், சிந்திக்கும் ஆற்ற லும் கற்றல் திறனும் வளரும். அவர் களின் உடல்நலன் மேம்படும். மேலும், ஆரம்ப சுகாதார மையங்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளையும் வழங்கி வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் 16,385 பள்ளிகளைச் சேர்ந்த 66 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். யுனிசெப் நிறுவன நிதி உதவியுடன் கடந்த ஆண்டு முதல்கட்டமாக 15,642 ஆசிரியர் களுக்கும் தலைமை ஆசிரியர் களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டும் யுனிசெப் நிதி உதவியுடன் தமிழகம் முழுவதும் 10,465 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 360 ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.