அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்காக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை கிடைக்காததால், செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.
மாநிலத்திலுள்ள அரசுக் கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு, 2012ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் வெளியிடப்பட்டது. கணிதம், இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு, புள்ளியியல், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் பணிகள் நடந்தன. உயர் கல்வித் தகுதி, பணி அனுபவம், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் தனித் தனியாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, கடந்தாண்டு ஆக., மாதம் நேர்காணல் நடத்தப்பட்டு, தேர்வானவர்களின் பட்டியலானது, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், கடந்த ஏப்., மாதம் வெளியிடப்பட்டது. ஆனால், தேர்வானவர்களுக்கு இதுவரை நியமன உத்தரவு கிடைக்காததால் அவர்கள் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர். தேர்வான ஒருவர் கூறுகையில், 'இதுவரை, பணி நியமன உத்தரவு கிடைக்காததால் எங்களை போன்றவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதை நம்பி, முன்னர் பணியாற்றிவந்த இடங்களில் பணியை ராஜினாமா செய்துவிட்டோம். தற்போது, பொருளாதார பிரச்னையில் சிக்கித் தவிக்கும் எங்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கி பணியில் சேர்க்க வேண்டும்' என்றார். உயர் கல்வித்துறை துணை செயலர் கோபால் கூறுகையில், ''நியமன ஆணை வழங்குவதற்கான செயல்பாட்டு பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்தவுடன் ஆணைகள் வழங்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.