WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 20, 2015

வேகமாக அழிகிறது மனிதஇனம்: ஆய்வில் தகவல்.

மியாமி : உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது என அனைவரும்
சொல்வது தான். ஆனால் பூமியில் 100 மடங்கு வேகமாக அழிந்து வரும் உயிரினம் மனிதர்கள் என அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த திடுக் தகவல் வெளிவந்துள்ளது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வேகமாக அழிந்த உயிரினம் டைனோசர். அதற்கு பிறகு வேறு எந்த உயிரினமும் அதிவேகமாக அழியவில்லை. ஆனால் தற்போது வேகமாக அழிந்து வரும் உயிரினங்களில் 6வது இடத்தில் மனித இpம் உள்ளது என ஸ்டான்போர்ட், பிரின்ஸ்டன், கலிபோர்னியா ஆகிய பல்கலை.,கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதே நிலை தொடர்ந்தால், மனிதஇனம் அழிந்து விடுவதுடன், பூமியில் மீண்டும் மனித இனம் தோன்ற பல மில்லியன் ஆண்டுகள் ஆகும் என இந்த ஆய்வு தொடர்பாக புத்தகம் எழுதி உள்ள மெக்சிகோ எழுத்தாளர் ஜிரார்டோ செபாலஸ் எச்சரித்துள்ளார். தவளைகள், ஊர்வன, புலிகள் போன்றவைகளின் எலும்பு படிவங்களைக் கொண்டு, வேகமாக அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.மனித இனம் வேகமாக அழிந்து வந்தாலும், அதற்கு முன் இயற்கை மாறுபாடுகளில் பல இனங்கள் பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து விடும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது இருவாழ்விகள் 41 சதவீதமும், பாலூட்டி உயிரினங்கள் 26 சதவீதமும் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. வேகமாக பெருகி வரும் மக்கள் தொகை, பழக்க வழக்க மாறுபாடுகள், தட்பவெப்ப நிலை மாறுபாடு, பொருளாதாரத்தை பெருக்க வேண்டும் என்ற அதீத ஆசை ஆகியனவே மனித இனம் மிக வேகமாக அழிந்து வருவதற்கான முக்கிய காரணங்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1279070 via http://j.mp/tamil_news

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.