‘டெங்கு’ காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முன் எச்சரிக்கைநடவடிக்கையாக, நிலவேம்பு கசாயத்தை அனைத்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கும் வழங்க வேண்டும் என, மாநில நகராட்சி நிர்வாகத்துறைஇயக்குனர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து திண்டுக்கல் மேட்டுப்பட்டி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.குடிநீர் பற்றாக்குறையினால் மக்கள் அவதிப்படும்போது, டெங்கு காய்ச்சல் மிக விரைவாக பரவும். இதைதடுக்கும் நோக்கில், தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் நிலவேம்பு கசாயத்தை பள்ளிமாணவ - மாணவிகளுக்கு வழங்க வேண்டும்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள ஜூலை மாதத்திற்கு முன்பாகவேகசாயம் வழங்கி முடித்திருக்க வேண்டும் என, மாநில நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் ராஜன், சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.நகர்நல அலுவலர் டாக்டர் அனிதா மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர்கள் 16 பேர் அடங்கிய குழு சிறப்புமுகாம்களில் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவ -மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
மாநகராட்சி பகுதியில் உள்ள 75 பள்ளிகளில் (அரசு மற்றும் தனியார் பள்ளிகள்) இந்த முகாம்கள் இந்த மாதம்முழுவதும் நடைபெற உள்ளது.ஏற்கனவே கடந்த வாரங்களில் 5017 மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்வழங்கப்பட்டுள்ளது. வரும் 2 வாரங்களில் 33 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில்,தலைமையாசிரியை தெய்வானை, சுகாதார ஆய்வாளர்கள், பாலமுருகன், லாவண்யா, கேசவன்பங்கேற்றனர்.
நகர்நல அலுவலர் அனிதா கூறியதாவது: ‘டெங்கு’வால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பள்ளிமாணவர்கள்தான். அதனால், ஜூலைக்கு முன்பே நிலவேம்பு கசாயத்தை குடிக்கும் சிறப்பு முகாம்களைமுடிக்க உத்தரவிட்டுள்ளோம். நன்கு கொதிக்கவைக்கப்பட்டு சற்று குடிக்கக்கூடிய வெதுவெதுப்பான சூட்டில்ஒவ்வொரு மாணவருக்கும் 15 மில்லி கசாயத்தை தருகிறோம். இதனால், மாணவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். நோய்கள் அண்டாது. இதை பெற்றோரும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.