WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 27, 2015

பள்ளிகளில் யோகாவை கற்பித்தால் போராட்டம்: மிஸோரம் மாணவர் அமைப்பு.

மத்திய அரசுப் பள்ளிகளில் யோகாவைக் கற்பித்தாலோ, பாடத் திட்டத்தில்
இணைத்தாலோ போராட்டம் நடத்தப்படும் என்று மிஸோரம் மாணவர் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மத்திய அரசுப் பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயமாக்கப்படும் எனவும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் பாடத் திட்டத்தில் யோகா சேர்க்கப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அண்மையில் அறிவித்தார். இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு மிஸோரம் மாணவர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: யோகா பாடத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுக்கு வலியுறுத்துகிறோம். பள்ளிகளில் யோகாவைக் கற்பித்தாலோ, பாடத் திட்டத்தில் இணைத்தாலோ மிúஸாரம் மாணவர் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளில் யோகா கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மிúஸாரத்திலுள்ள சில அமைப்புகளும், தேவாலயங்களின் கூட்டமைப்புகளும் அந்த மாநில அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.