WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 27, 2015

தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி தேர்வு
முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கூடுதல் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) சி.சுந்தரேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வியின் கல்வியாண்டு தேர்வுகள், துணைத்தேர்வுகள் மே 20-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெற்றன. அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை பாடப்பிரிவில் வணிக மேலாண்மை மூன்றாமாண்டு, கணிதம், உளவியல், வரலாறு, தமிழ் மூன்றாமாண்டு, வணிகவியல் இரண்டாமாண்டு பாடப்பிரிவுகளுக்கும், முதுநிலைப் பாடப்பிரிவில் கணிதம், உளவியல், வணிகவியல் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு, சுற்றுச்சூழல் முதாலண்டு மற்றும் இரண்டாமாண்டு, முதுநிலைப் பட்டயம் கணிப்பொறி பயன்பாட்டியல், தொலைநிலைப்படிப்பு, அடிப்படை நிலை இரண்டாமாண்டு போன்ற பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.