WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 15, 2015

பொறியியல் படிப்புக்கான சமவாய்ப்பு எண் வெளியீடு.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்த
மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) இன்று காலை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1.80 லட்சம் அரசு ஒதுக்கீட்டு பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2015-16 கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 6-ஆம் தேதி தொடங்கியது. மே 27-ஆம் தேதி வரை தமிழகத்தின் பிற மையங்களிலும், மே 29-ஆம் தேதி வரை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றிருந்த மையங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகமாகின. இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாகும். இதுபோல் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களின் எண்ணிக்கையும் இம்முறை வெகுவாகக் குறைந்தது. வெறும் 1 லட்சத்து 54 ஆயிரத்து 450 பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இம்முறை சமர்ப்பித்தனர். இந்த நிலையில் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை வெளியிடப்பட்டது. மாணவர்கள் இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.