WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 15, 2015

போராட ஆசிரியர் கூட்டணி முடிவு.

அனைத்து அரசு ஊழியர் சங்கங்களுடன் இணைந்து விரைவில் போராட்டம்
  1. அறிவிக்கப்படும்' என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மதுரையில் நடந்த இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் மோசஸ் தலைமை வகித்தார். பொது செயலாளர் பாலச்சந்திரன், பொருளாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முருகன் வரவேற்றார்.கல்வி துறையில் வெளிப்படையான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு ஊழியர் சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.