தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 15) மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவினர் தெரிவித்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இணையதளங்களில்... தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in ஆகியவற்றில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
1300 மாணவர்களின் மதிப்பெண் மாற்றம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 32,184 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி.-யை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் தேர்வுத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அளித்தனர். உயிரியல்-இயற்பியல்-வேதியியல்-கணிதம் ஆகிய பாடங்களில் மறு கூட்டல், மறு மதிப்பீடு என மொத்தம் 1,300 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் உள்ளது என்றும் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் சேர்க்கப்பட்டு எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதிப்பெண் மாற்றம் உள்ளோர் பட்டியல்: மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்புக்கு உரிய பாடங்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மொத்தம் 3,478 மாணவர்களின் பதிவெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 15) மாலை 4 மணிக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண் மாற்றம் இல்லாத பதிவெண்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஜூன் 16-ஆம் தேதி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.