WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 10, 2015

ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிட கோரிக்கை.

ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு முடிவின் போது மதிப்பெண்களையும்
வெளியிட ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மையம் சார்பில் கல்வித்துறைக்கு கோரிக்கையில், அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த மே.31ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சுமார் எட்டரை இலட்ச் பேர் இத்தேர்வை எதிர்கொண்டனர். எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிடும்போது மாணவ, மாணவியர்களின் மதிப்பெண்களையும் சேர்த்து வெளியிட கல்வித்துறை பரிசீலனை செய்ய வேண்டும். தற்போது குரூப் தேர்வு முடிவுகளின் போது டிஎன்பிஎஸ்சி., தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சேர்த்து வெளியிட்டு வருகிறது. அதே முறையை கல்வித்துறை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.