பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ் 15-ந் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
பிளஸ்-2 மாணவர்கள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 31-ந் தேதி முடிவடைந்தது. தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு மே மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் விவரம் தேர்வு முடிவுடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் (புரவிஷனல் சர்டிபிகேட்) இந்த வருடம் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி வழங்கப்பட்டது.
இதுவரை மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு 15-ந் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி, இணை இயக்குனர் உமா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
15-ந் தேதி மதிப்பெண் சான்றிதழ்
2015-ம் வருடம் மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. மே மாதம் 14-ந் தேதி தற்காலிக சான்றிதழ் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டது.
15-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிக்கூடங்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கப்படும். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.