WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 4, 2015

என்ஜினீயரிங் படிப்பு ஆர்வம் குறைந்தது: 2 நாட்கள் கலந்தாய்வில் 1818 பேர் வரவில்லை.

கடந்த காலங்களில் நடந்த பொதுப்பிரிவு கலந்தாய்வில் மாணவர்கள்
பெருமளவு பங்கேற்று ஆர்வத்துடன் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தார். ஆனால் இந்த வருடம் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைத்து வருகிறது. கடந்த 2 நாட்கள் நடந்து முடிந்து கலந்தாய்வில் 1818 மாணவ – மாணவிகள் பங்கேற்கவில்லை. 6638 பேர் அழைக்கப்பட்டதில் 4810 பேர் மட்டுமே பங்கேற்று இடங்களை தேர்வு செய்தனர். முதல் நாள் நடந்த கலந்தாய்வில் 761 பேர் பங்கேற்கவில்லை. இந்த எண்ணிக்கை நேற்று 1057 உயர்ந்தது. 4621 பேர் அழைக்கப்பட்டதில் 3564 பேர் மட்டுமே வந்திருந்தனர். அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்கள் எண்ணிக்கை அடுத்தடுத்து வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதை தவிர்த்து கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் அதிகளவு மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றுள்ளனர். 4 ஆண்டுகளில் குறைந்தது 4 லட்சம் செலவு செய்து படித் தாலும் கூட வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலையும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றக்கூடிய நிலையும் ஏற்பட்டு இருப்பதால் பொறியியல் கல்லூரிகள் மீது இருந்த மோகம் குறைந்தது. சிறந்த கல்லூரிகளில் நன்றாக படித்து முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு மட்டுமே நல்ல வாய்ப்புகள் உள்ளன. குறைந்த கட்–ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பெயரளவுக்கு என்ஜினீயர் என்ற அடைமொழியை போட்டு கொள்ளும் வகையில்தான் வரும் காலங்களில் பொறியாளர்களின் நிலை இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.