WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 3, 2015

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை நாளை மாலை வெளியிடப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் தேர்வு நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் சுமார் 4.5 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வெழுதினர். இவர்களில் 16 ஆயிரத்து 933 பேர் தேர்ச்சி பெற்று பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். ஆனால், டிசம்பர் மாதம் நடந்த பிரதான தேர்வில் 16 ஆயிரத்து 286 பேர் மட்டுமே பங்கேற்றனர். மார்ச் மாதம் பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 3308 பேர் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஏப்ரல் 27-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெற்ற நிலையில், நாளை இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேர்முகத் தேர்வு முடிந்த 4 நாட்களுக்குள் இறுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவது இதுவே முதல் முறை என்றும் யுபிஎஸ்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.