அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் புத்தக படிப்பு மட்டுமல்லாமல், மாணவ,
மாணவியரின் கற்பனை திறன், பிற திறமைகளை வளர்க்கும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், நீலகிரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சார்பில், 6,7,8 ஆசிரியர்களுக்கான பயிற்சி, வரும், 25ம் தேதி வழங்கப்பட உள்ளது.எஸ்.எஸ்.ஏ., அலுவலர்கள் கூறுகையில்,'நடுநிலை வகுப்பில், படைப்பாற்றல் கல்வி முறையில், பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதில், மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாவட்டத்தில் உள்ள, 1,006 ஆசிரியர்களுக்கு, 60 முதன்மை கருத்தாளர்கள் மூலம், வலுவூட்டும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன' என்றனர். முதற்கட்டமாக, முதன்மை கருத்தாளர்களுக்கு, ஊட்டி பிலோமினா பள்ளியில் பயிற்சி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.