கல்லுாரி, பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில், கைத்தறி
துணிகளை பயன்படுத்த, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.கைத்தறித் துணி வர்த்தகத்தை அதிகப்படுத்த, புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதுகுறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:பட்டமளிப்பு விழாக்களுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு, விலை உயர்ந்த பட்டாடை, சால்வை போர்த்தி, மரியாதை செலுத்தப்படுகிறது. இனி, கைத்தறித் துணிகளையே இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., வழிகாட்டுதலின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, எல்லா கல்லுாரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.