பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் நிரப்பப்பட 50
மேற்பார்வையாளர் பயிற்சி இடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:.01/2015
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
பணி: மேற்பார்வையாளர் டிரெய்னி (நிதியியல்)
தகுதி: 70 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.07.1988 தேதிக்கு முன்பு பிறந்திருக்கக் கூடாது.
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 26,000 வெற்றிகரமான பயிற்சிக்கு பின்பு உதவி அலுவலர் கிரேடு-II பிரிவில் பணியமர்த்தப்பட்டு மாதம் ரூ.12,400 - 30,500 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை பெல், பவர் ஜோதி 30858786786 என்ற கணக்கு எண்ணில் எஸ்பிஐ வங்கியின் கிளைகளில் செலுத்தவும்.
ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The AGM (HR) BHEL Electro Porcelains Division,
Prof. C.N.R. Rao Circle, Opp. Indian Institute of Science,
Malleswaram Bengaluru – 560012
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.09.2015 (உத்திரேசமாக)
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhel.in/str2015/static/st2015_vacancies.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.