தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்துள்ளவர்கள், அதில்
75 சதவீதம் மட்டுமே முழுமையாக எடுக்கமுடியும் எனவும் மீதம் உள்ள 25 சதவீதம் 58 வயது வரை கணக்கில் இருப்பு வைத்திருக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறையிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் ஓரிரு வாரங்களில் அமலாகிறது. இதன் படி வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்துள்ளவர்கள், 2 மாதங்கள் பணியில் இல்லை என்ற சான்றிதழ் வழங்கியவுடன் தொழிலாளர்கள் , பி.எப்.பணம் முழுவதையும் எடுக்க முடியாது. 75 சதவீதம் மட்டுமே எடுக்க முடியும் எனவும், மீதமுள்ள 25 சதவீதம் 58 வயது வரை கணக்கில்இருக்கும் எனவும் திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.