WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 7, 2015

வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்க ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு.

அகில இந்திய வேலை நிறுத்தத்தில், அனைவரும் பங்கேற்பது என தமிழ்நாடு
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாவட்ட செயற்குழு கூட்டம் திருநாவலூர் வட்டார வள மையத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஷேக் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரஹீம் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலா ளர் சம்சுதீன் வரவேற்றார்.கூட்டத்தில் ஆறாவது ஊதிய குழுவிலுள்ள முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி செப்., 2ம் தேதி நடக்கும், அகில இந்திய வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கு கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட துணை செயலாளர் சண்முகசாமி, மாவட்ட துணை தலைவர்கள் வில்லியம், லட்சுமி, துணை செயலாளர் சரவணன், வட்டார செயலாளர்கள் ஜீவா, குமார், மதலைமுத்து, பாக்கியராஜ், மகிமைதாஸ், தங்கராசு, பத்மநாபன், சுப்ரமணியன், சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கோபாலாகிருஷ்ணன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.