WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 17, 2015

ஆசிரியர்கள் நியமனத்தில் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்வு பெற்றோர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் அரசு பள்ளிகளில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட்டனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமிப்பதில்லை என, புகார் எழுந்தது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி்தேர்வில் தேர்வு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பணியிடம் ஒப்புதல் கிடைக்கும் வரை காலியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.