தனியார் பள்ளிகளுக்கான, முரண்பாடான நிலப்பரப்பு விதிமுறைகளை,
காலத்திற்கு ஏற்ற வகையில் தளர்த்தவும், 10 ஆண்டுகள் பழமையான பள்ளிகளுக்கு விதிவிலக்கு வழங்கவும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தனியார் பள்ளிகளை துவங்க, பல நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. சிட்டி பாபு குழு மற்றும் நீதிபதி சம்பத் கமிட்டி ஆகியவற்றின் அறிக்கைப்படி,
குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பு இருக்க வேண்டும்.
இரு இடங்களில் (வளாகத்தில்) ஒரே பள்ளி செயல்படக் கூடாது.
பள்ளி கட்டடம் மற்றும் இடங்களுக்கு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாவட்ட திட்ட ஆணையம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
பள்ளிக்கு உறுதிச் சான்றிதழ் இருக்க வேண்டும்.
மைதானம் இருக்க வேண்டும். இப்படி, பல கட்டுப்பாடுகள் உள்ளன.
இதில், நிலப்பரப்பு பிரச்னையால், தமிழகம் முழுவதும், 1,200 தனியார் பள்ளிகள்; 520 அரசு உதவிபெறும் பள்ளிகள், அங்கீகாரப் பிரச்னையில் சிக்கியுள்ளன.
இந்த பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் தொடர்ந்து இயங்கி வருகின்றன. அங்கீகாரம் இல்லாததால், அரசின் உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலர், இந்த பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.