WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 18, 2015

பொதுமாறுதலுக்கு நிபந்தனை பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி.

ஆசிரியர்களின் பொதுமாறுதலுக்கு அரசு நிபந்தனை விதித்து உள்ளது,
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தேனி மாவட்ட தலைவர் மோகன் கூறியதாவது: நடப்பு ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் குறித்து அரசு புதிய உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவில், "ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு முன்னர், மாணவர்களின் நலன் கருதியும், ஆசிரியர்களின் நலன் கருதியும், பள்ளியின் நலன் கருதியும், தேவையின் அடிப்படையில் நிர்வாக மாறுதல் வழங்கப்பட வேண்டும்.' என கூறப்பட்டுள்ளது.இந்த விதி ஆசிரியர்களுக்கு பயத்தையும், மனக்கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் உள்ள ஒரு சில காலிப்பணியிடங்களை கூட இந்த விதியின் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையானவர்களுக்கு கலந்தாய்வுக்கு முன்னரே வழங்க முடியும். மூன்று ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றியவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்ற விதியை மாற்றி, ஓராண்டு பணிபுரிந்தவர்கள் கூட கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்ற பழைய விதியை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை கலந்தாய்விற்கு இரண்டு நாட்கள் முன்னரே முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒட்ட வேண்டும். உபரி பணியிடங்கள் எப்பள்ளிகளில் உள்ளது. எந்த பள்ளிக்கு தேவை என்பதையும் ஒட்ட வேண்டும். உபரி பணியிடங்கள் அனைத்தும் தேனி மாவட்டத்திற்குள் பணியமர்த்தப்பட வேண்டும். ஆங்கில கல்வி வகுப்புகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல், கூடுதல் பணியிடங்களை ஒதுக்க வேண்டும், என்றார்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.